Wednesday, December 16, 2009

கககா கிக்கீகூகூ கெகெக்கே குகூகெகே கவுஜ!!!

நண்பர்கள் குழாம் -
எனக்கு இரண்டு உண்டு.


இரண்டிலும்
எல்லாரையும்
நன்றாக கலாய்ப்பேன்
நானும்
கலாய்க்கப்படுவேன்.


இரண்டிலும்
இடியாப்பத்திலிருந்து
இத்தாலியன் பீட்ஸா வரை
அனைத்தையும்
ஒரு கை
பார்ப்போம்.


இரண்டிலும்
அறுவை ஜோக்கிலிருந்து
அடல்ட்ஸ் ஒன்லி
ஜோக்ஸ் வரை
எல்லாவற்றையும்
அலசுவோம்.


இரண்டிலும்
புத்தம் புதிய
படங்களிலிருந்து
பழைய படங்களை வரை
அனைத்தையும்
பார்த்து
விமர்சிப்போம்.


இப்படி இரு குழாமிலும்
இவ்வளவு ஒற்றுமை
இருக்கிறதே,
ஏதாவது ஒரு
வேற்றுமையாவது
இருக்கிறதா என்று
பார்த்தேன்.


பளிச்சென்று
தெரிந்தது ஒரு
வேற்றுமை.


ஒரு குழாமில்
நான் சகதமிழன்

மற்றொன்றில்
சாலா மதராஸி...

***********

12 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi December 16, 2009 12:18 PM  

வாஹ் வாஹ் , பஹுத் அச்சா பாய்..

pappu December 16, 2009 12:27 PM  

எனி சைடு எஃபெக்ட்! :)

ILA(@)இளா December 16, 2009 1:11 PM  

கவிதை கவிதை

Unmaivirumpi December 16, 2009 1:28 PM  

எப்படி உங்களுக்கு மட்டும் இப்படி தோணுது !!! Superb !!!

எம்.எம்.அப்துல்லா December 16, 2009 1:30 PM  

வாரே வாவ்! கித்தனா அச்சா இடுகை சோட்டாலட்காஜி

:)

Chitra December 16, 2009 3:11 PM  

மதராசி .................. தோழா, கவுஜ சால பாக உந்தி.

ஹாலிவுட் பாலா December 17, 2009 1:27 PM  

அண்ணே.. பத்து பேரு ஓட்டு போட்டிருக்காங்க. அதுக்காகவாவது கொஞ்சம் பார்த்து பண்ணுங்க!

ரத்தக் கண்ணீரே வந்துடும் போல இருக்கு!! ம்ம்ம்ம்ம்ம்முடியல! :) :)

Manalkayiru December 18, 2009 4:30 AM  

annae...idha vittuteengale..

irandilum
arraakil aarambithu
methuvaa yethum
mcdowells varaikkum
mutta mutta
kudichi irukkom...

walla kavithai...vaazhthukkal.

Manalkayiru December 18, 2009 10:07 AM  

அலுவலகத்திலிருந்து மறுமொழியிட்டதால் ஆங்கிலத்தில் போடும்படியாகிவிட்டது.

மன்னிக்கவும்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP