Tuesday, November 17, 2009

பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்!!!






மேலே இருக்குற படங்களையெல்லாம் பாத்தீங்கல்லே! எப்படி டெர்ரரா இருக்குதுன்னு. பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்னு சொன்னா, யாரு கேக்குறாங்க.

அந்த படங்கள் சொல்றத இங்கே பாட்டா படிச்சிருக்கேன் பாருங்க. எல்லாம் ஏதோ ஒரு சினிமா பாட்டோட உல்டாதான் (அது சரி, ஒரிஜினல் பாட்டு எழுதத் தெரிஞ்சா, நான் ஏன் இங்கே பொட்டி தட்டிட்டிருக்கேன்!!). என்னென்ன பாட்டுன்றத நீங்களே கண்டுபிடிச்சிக்கோங்க.

நல்லாயிருந்தா நாலு வார்த்தை சொலிட்டு உங்க மன பாரத்தை இறக்கி வெச்சிட்டு போங்க!!!

*********

தாக்காதே என்னை தாக்காதே
ஜல்லி கரண்டியால என்னை தாக்காதே
இழுக்காதே என்னை இழுக்காதே
லுங்கி கிழியப்போது என்னை இழுக்காதே

வேணாம் வேணான்னு நான் அழுதேன்
நீ தானே என்ன சாத்திப்புட்டே!
போடா போடான்னு என்னை விரட்டி
சந்துல நீ தானே மொத்திப்புட்டே !

நல்லா இருந்த என் சட்டையை
நாராக கிழிச்சிபுட்டே!
கறுப்பா இருந்த என் கண்களை
கலரா மாத்திபுட்டே !
***********
பார்த்து பார்த்து கண்கள் பயந்திருக்கு
நீ வருவாய் என
பயந்து பயந்து கண்கள் சிவந்திருக்கு
நீ வருவாய் என

பேசிக்கிட்டே நீ வருவாயா - காதை கொடுக்கிறேன்
சாந்தமாக நீ வருவாயா - ஜோக்கு அடிக்கிறேன்
வேகமாக நீ வருவாயா - காப்பி தருகிறேன்
கோபமாக நீ வருவாயா - சாம்பல் ஆகிறேன் (நீ வருவாய் என)
**********
சப்பாத்தி கட்டை உடையும் நேரமிது
தங்கமணி அழைக்குது ஆஆஆஆஆஆ
கருப்பு சட்டை கிழியும் நேரமிது
லுங்கியும் கிழியறதுக்குள்ளே வாஆஆஆஆ

தரையிலே தூக்கிப் போட்டு மிதித்திடவே
இரு காலும் துடிக்குது
தரதரன்னு இழுக்கையில்
புது சுகம் பிறக்குது (சப்பாத்தி)

********
அம்மாடி... இதுதான் உதையா?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அட ராமா... இது எப்போ முடியுமோ?

முதுகுலே ஏதோ டம்டமுன்னு கேட்குது
தலையிலே ஏதோ லொட் லொட்டுன்னு விழுகுது

போடுங்க போடுங்க இன்னும் போடுங்க
வேணும் நல்லா வேணும்
சொல்ற பேச்சை கேட்டு நடந்துக்காட்டி
மண்டை ரெண்டா உடையும்
ஆஆஆஆஆ
***********

18 comments:

தேவன் மாயம் November 17, 2009 10:21 AM  

தாக்காதே என்னை தாக்காதே
ஜல்லி கரண்டியால என்னை தாக்காதே
இழுக்காதே என்னை இழுக்காதே
லுங்கி கிழியப்போது என்னை இழுக்காதே///

பிரிச்சி மேஞ்சிட்டீங்க!!

வால்பையன் November 17, 2009 10:52 AM  

நல்ல டாக்டரா கிடைக்க வாழ்த்துக்கள்!

என்னாது டாக்டர் தேவன்மாயமா!?
அந்த பாட்டை சிலாகிஞ்சு பின்னூட்டம் போடும் போதே தெரியலையா அவர் கதி என்னான்னு!

இராகவன் நைஜிரியா November 17, 2009 1:40 PM  

ஆஹா... இதுவல்லவோ.. இடுகை..

ரங்கமணிகளுக்காக பரிந்து பேச, பாட்டுப் போட ஒரு தலைவர் கிடைச்சுட்டாருங்க..

நன்றி, நன்றி, நன்றி, நன்றி

இராகவன் நைஜிரியா November 17, 2009 1:42 PM  

// வால்பையன் said...
நல்ல டாக்டரா கிடைக்க வாழ்த்துக்கள்!

என்னாது டாக்டர் தேவன்மாயமா!?
அந்த பாட்டை சிலாகிஞ்சு பின்னூட்டம் போடும் போதே தெரியலையா அவர் கதி என்னான்னு! //

அதான் நீங்களே சொல்லிட்டீங்களே..

டாக்டர் தேவன் மாயம்... அதான் மாயமா மறைஞ்சுட்டார்.

இராகவன் நைஜிரியா November 17, 2009 1:42 PM  

// மேலே இருக்குற படங்களையெல்லாம் பாத்தீங்கல்லே! எப்படி டெர்ரரா இருக்குதுன்னு. பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்னு சொன்னா, யாரு கேக்குறாங்க. //

அவன் அவன் பயந்து கிடக்கிறான். இது மாதிரி படத்தை எல்லாம் போட்டு ஏங்க பீதிய கிளப்பறீஙக..

இராகவன் நைஜிரியா November 17, 2009 1:43 PM  

// (அது சரி, ஒரிஜினல் பாட்டு எழுதத் தெரிஞ்சா, நான் ஏன் இங்கே பொட்டி தட்டிட்டிருக்கேன்!!). //

ஏன் தங்கமணிகிட்ட அடிவாங்கிட்டு இருக்கேன் என்றும் சேர்த்துகோங்க

இராகவன் நைஜிரியா November 17, 2009 1:44 PM  

// நல்லாயிருந்தா நாலு வார்த்தை சொலிட்டு உங்க மன பாரத்தை இறக்கி வெச்சிட்டு போங்க!!!//

மன பாரத்தை இறக்கி வைக்கிறதா... இந்த படங்களையும், பாட்டையும் பார்த்து, மனபாரம், மனவேதனை எல்லாம் ஜாஸ்தியாடுச்சு...

அவ்....அவ்....அவ்....அவ்...அவ்....அவ்..வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Mahesh November 17, 2009 2:00 PM  

அடி கொஞ்சம் பலமோ?? :(

ILA(@)இளா November 17, 2009 5:19 PM  

இதை எல்லாமா வெளியே சொல்லிட்டு இருக்குறது? நாங்க எல்லாம் சொல்றோமா என்ன?

அறிவிலி November 17, 2009 7:17 PM  

ஹ்ம்ம்... ஆபீசுக்கு வந்து மறந்திருக்கலாம்னா, ஞாபகப்படுத்திடீங்களே.

உங்கள் தோழி கிருத்திகா November 17, 2009 9:12 PM  

ஆகா ஆகா இதுவல்லவோ பாட்டு....பின்னிடிங்க :)

மங்களூர் சிவா November 18, 2009 3:29 AM  

/
அறிவிலி said...

ஹ்ம்ம்... ஆபீசுக்கு வந்து மறந்திருக்கலாம்னா, ஞாபகப்படுத்திடீங்களே.
/

அதானே
:))

புலவன் புலிகேசி November 18, 2009 4:01 AM  

என்னமா யொசிக்கிறீங்க.....

ஸ்ரீமதி November 18, 2009 4:14 AM  

1. பாக்காதே என்ன பாக்காதே குத்தும் பார்வையால என்ன பாக்காதே..

2. பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாய் என...

3. இதழில் கதை எழுதும் நேரமிது...

4. அம்மாடி இதுதான் காதலா? அட ராமா இது என்ன வேதமோ?

நல்லாதான் பண்றீங்க உல்டா.. :))

Chitra November 18, 2009 11:49 AM  

ரொம்ப feel பண்ணி எழுதின மாதிரி இருக்கு. அனுதாபத்திற்கு பதில் சிரிப்பு வந்தது.

விஜயசாரதி November 18, 2009 12:33 PM  

//நல்லா இருந்த என் சட்டையை
நாராக கிழிச்சிபுட்டே!
கறுப்பா இருந்த என் கண்களை
கலரா மாத்திபுட்டே !//

அநியாயம்..அக்கிரமம்...தேவையில்லாம பல பொழப்புல மண்ணள்ளி போடற வாத்தியாரே...

உஜூர்...உங்க பாட்டு படு ஜோர்...

யாரோ எழுதின படப்பாட்டா
நாரா பிரிச்சு மேஞ்சுப்புட்டே
தேவையில்லாம இத எழுதி
தங்க..மணிய கிளறிவிட்ட...

இனிமே..யார் சொன்னாலும்
தங்க..மணி கேட்காது..
அய்யோன்னு கத்தினாலும்
உதயோ மிதியோ நிக்காது...

வாழுத்துக்கள்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP